தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 241 பேர் பலி.. பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது..

8 May 2021, 7:12 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 27,397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 6,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 2,458 பேருக்கும், கோவையில் 2,117 பேருக்கும், திருவள்ளூரில் 1,284 பேருக்கும், மதுரையில் 1,217 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,412ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 23,110 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 96 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 1,39,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 139

0

0