உச்சம் பெறும் கொரோனா… கோவைக்கு 2வது இடம் : இன்று ஒரே நாளில் 29 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு..!!

10 May 2021, 7:32 pm
Corona_Test_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,000-ஐ நெருங்கியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 28,967 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,09,237ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 2,181 பேருக்கும், கோவையில் 2,782 பேருக்கும், திருவள்ளூரில் 1,008 பேருக்கும், மதுரையில் 1,024 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,880ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 20,904 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 40 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 1,52,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 112

0

0