மளமளவென அதிகரிக்கும் கொரோனா : இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..!!

14 April 2021, 6:30 pm
Tamilnadu_Corona_updateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளது.

தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று 7,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 2,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 772 பேருக்கும், கோவையில் 540 பேருக்கும், திருவள்ளூரில் 383 பேருக்கும், தூத்துக்குடியில் 244 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,970 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3,289 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரத்து 663 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 54,315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona 1404- updatenews360

Views: - 36

0

0