தமிழகத்தின் குரல்வளையை பிடித்த கொரோனா : இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டியது!!

21 April 2021, 7:23 pm
coronavirus_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 11,000 ஐ தாண்டியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 11,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 3,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும், திருவள்ளூரில் 529 பேருக்கும், மதுரையில் 462 பேருக்கும், சேலம் 401 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 7,071 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 84,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 301

0

0