இன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..!!
27 January 2021, 6:43 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது
படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை 600த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று 512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,36,315ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,333 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 564 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 306ஆக அதிகரித்துள்ளது.
0
0