தமிழகத்தில் 3வது அலை தொடங்கியதா…? மீண்டும் 2,000த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!!

Author: Babu
31 July 2021, 7:23 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இன்று மீண்டும் 2,000-ஐ நெருங்கி வருகிறது. அதாவது, 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 204 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும், ஈரோட்டில் 165 பேருக்கும், சேலத்தில் 73 பேருக்கும் உறுதியாகியுள்ளது..

தமிழகத்தில் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,076 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,178 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 04 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.

Views: - 176

0

0