தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்..!!

20 April 2021, 8:16 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தமிழகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை. தடுப்பூசியை வீணாக்காமல் பயன்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வீணாவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்புள்ளது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன, எனக் கூறினார்.

Views: - 77

0

0