இன்றும் தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆக பதிவு : சென்னை, கோவை உச்சத்தில் தொற்று உறுதி

Author: Babu Lakshmanan
7 December 2021, 7:48 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்றும் சற்று குறைந்துள்ளது. இன்று மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 710 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,31,945ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று சென்னையில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 122 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,549 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 731 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 87 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 222

0

0