80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

6 March 2021, 8:58 pm
sathyapratha sahoo - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பாக தேர்தலை நடத்திய முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. எனவே, தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

முன்பு 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை பேதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை சாந்தோமில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்ய பிரதா சாகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12டி விண்ணப்பத்தை பெற்று தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும், பணத்திற்கு வாக்குக்களை விற்று விட வேண்டாம் எனவும் கூறினார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடத்தப்படும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சத்யபிரதா சாகு மறுப்பு தெரிவித்தார்.

Views: - 1

0

0