மிகக்குறைந்த மருத்துவ கட்டணம்.! இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகம் அசத்தல்..!

30 October 2020, 9:06 pm
Hospital_Treatment_UpdateNews360
Quick Share

இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சேவைகள் அதற்கான கட்டணங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட மத்திய அரசு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், மிகக் குறைந்த மருத்துவ செலவுகளைக் கொண்டு தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் சாதாரண சிகிச்சைக்கு தோராயமாக 433 ரூபாய் முதல் 520 ரூபாய் வரை செலவாகிறது மற்றும் இதுவே தனியார் மருத்துவமனைகளில் 28,412 ரூபாய் முதல் 41,566 ரூபாய் வரை செலவாகிறது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 42% மற்றும் கிராமப்புறங்களில் 56% ஆக உள்ளது.

இதுவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 54% மற்றும் கிராமப்புறங்களில் 41% என உள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2’வது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

1 thought on “மிகக்குறைந்த மருத்துவ கட்டணம்.! இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகம் அசத்தல்..!

Comments are closed.