ஊரக உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Author: Udhayakumar Raman
6 September 2021, 9:18 pm
TN Sec -Updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்த்தூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 190

0

0