வனத்துறையை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பில் தமிழ்நாடு கிரீன் கிளைமன் நிறுவனம் : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

Author: Babu Lakshmanan
18 November 2021, 11:15 am
minister ramachandran - updatenews360
Quick Share

தருமபுரி : வனத்துறை மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு கிரீன் கிளைமட் எனும் நிறுவனம் தொடங்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, இக்கலந்தாய்வு கூட்டத்திற்கு சட்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைளை கேட்டறிந்தார். பிறகு வனவிலங்குகளால் தாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கியதோடு சிறப்பாக பணிபுரிந்த வனக்காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இதனையடு்த்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, அடித்தட்டு மக்களும் பயன்பெறுகின்ற வகையில், மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்ட முன்னேற்றங்கள் குறித்து மாவட்டம் தோறும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வனத்துறை மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் வனத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு கிரீன் கிளைமட் எனும் நிறுவனம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதற்கான காரணங்களை கண்டறியவும், யானை உள்ளிட்ட வனவிலங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்தினை ஏற்படுத்திடவும் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் வனத்துறையில் நிலுவையிலுள்ள பொதுமக்களின் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனை விரைவில் தீர்வு காண தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் விரைவில் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வனப்பகுதிகளிலிருந்து யானைகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க அகழிகள் மற்றும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யானைகள் அதனை சேதப்படுத்திவிட்டு கிராமங்களுக்குள் நுழைவைதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 12 வன மண்டலங்களில் சேதப்படுத்தும் அகழிகளை உடனடியாக சரிசெய்யும் வகையில் வனத்துறையினர் நிதியில் 12 ஜே.சி.பி., இயந்திரங்கள் வாங்கி நிரந்தரமாக வைப்பதற்கான நடவடிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் வாங்கப்படும், என கூறினார்.

இந்த நிகழ்வில் தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், முதன்மை தலைமை வனபாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் மற்றும் விவசாயிகள் அரசு அதிகாரிகள கலந்துகொண்டனர்.

Views: - 294

0

0