முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் Er.R. சந்திரசேகர் சந்திப்பு !!
29 January 2021, 11:00 amசென்னை : புதிதாக தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்ட Er.R. சந்திரசேகர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கோவையில் உள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றிற்கு தனது ஆலயம் அறக்கட்டளையின் மூலம் கைகொடுத்து வருபவர் Er.R. சந்திரசேகர். இவர் நேற்று தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்ட Er.R. சந்திரசேகர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, தேசியளவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளை தமிழகத்திலும் நடத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் Er.R. சந்திரசேகர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். மேலும், சென்னையில் உள்ள மைதானத்தில் பாராலிம்பிக் சங்கத்தினருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, இந்தியன் பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக், தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு சங்க துணை தலைவர் கிருபாகர ராஜா, தமிழ்நாடு பாராலிம்பிக் கமிட்டி செயலாளர் அனந்த ஜோதி, இந்தியன் பாராலிம்பிக் கமிட்டி செயலாளர் குருஷரன் சிங் மற்றும் பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0
0