தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர். சந்திரசேகர் : குவியும் வாழ்த்து..!!!
28 January 2021, 2:13 pmசென்னை : தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை எந்தவித இலாபநோக்கமும் இல்லாமல் செய்து வருகிறது. பெண்களுக்கான சுய தொழில் பயிற்சி மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த ஆலயம் அறக்கட்டளையின் நிறுவனர் Er.R. சந்திரசேகர் விளையாட்டுகளில் ஆர்வமிக்கவர்கள் சாதிக்கத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
இப்படி, பல்வேறு உதவிகளை செய்து வரும் Er.R. சந்திரசேகர் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த பதவியேற்பு விழாவில் முறைப்படி அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்திய பாராலிம்பிக் சங்கத் தலைவர் தீபா மாலிக், இந்திய பாராலிம்பிக் சங்கப் பொதுச்செயலாளர் குர்ஷரன் சிங், இந்திய பாராலிம்பிக் சங்கத்தின் தேசிய தலைமை பயிற்சியாளர் சத்ய நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ரூ.1 லட்சமும், பாராலிம்பிக் தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமாருக்கு ரூ. 50 ஆயிரமும், பாராலிம்பிக் துணை தலைவர் உதய குமாருக்கு ரூ.25,000மும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதனிடையே, தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் சந்திரசேகர், தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர்களை உலகளவில் சாதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என தமிழக வீரர், வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0
0