கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார்… மதுரைக்கு பாதிப்பில்லை : அமைச்சர் மூர்த்தி கணிப்பு

16 July 2021, 6:16 pm
minister moorthi - updatenews360
Quick Share

மதுரை : கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், மதுரைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக துறை சங்கம் இணைந்து மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார்.. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்,

பின்பு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மூன்றாம் அலைக்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை இல்லாமல் அனைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார். மூன்றாம் ஆலை மதுரை பாதிக்காது. நீட் விவகாரத்தில் 10 வருடம் சட்டமன்ற தீர்மானம் போட்டு மத்திய அரசு அனுமதி வாங்க முடியாத நிலையில் தற்போது குறை கூறுவது நியாயமா?. வணிக வரித்துறையை பொருத்தவரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல வணிகர்களிடம் கருத்துக்கள் கேட்டபிறகு அவர்கள் தொழிலை நேர்மையாகச் செய்வதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரும். வணிக நல வாரியங்கள் அமைப்பதற்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு போலியாக பில் தயாரித்து அனுப்பக்கூடிய சரக்குகளை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊழலில் மொத்த உருவமாக பத்திரத்துறை இருந்துள்ளது. அதனை 2 மாதத்தில் கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரத்துறையில் அதிமுக ஆட்சியில் ஒருவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

போலீஸ் நிலையம் மற்றும் கோவில் நிலங்கள் போலியாக அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 10 வருடங்களில் அதிமுக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மதுரை பக்கம் வரவில்லை, எனக் கூறினார்.

Views: - 195

0

0