தமிழகத்தில் 1,592 பேருக்கு கொரோனா உறுதி: 18 பேர் பலி

Author: Udhayakumar Raman
5 September 2021, 8:33 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,592 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 22 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 71 ஆயிரத்து 378 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந் தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 018 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் புதிதாக 165 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 148 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127 பேருக்கும் ஈரோட்டில் 104 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 215

0

0