மீண்டும் தமிழகத்தில் 1,700-ஐ கடந்த கொரோனா : கோவை, சென்னைதான் வழக்கம் போல டாப்பு..!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 8:13 pm
TN corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று 1,733 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,53,848ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 205 பேருக்கும், செங்கல்பட்டுவில் 122 பேருக்கும், ஈரோட்டில் 119 பேருக்கும், திருப்பூரில் 98 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,631 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 01ஆயிரத்து 198ஆக அதிகரித்துள்ளது.

Views: - 112

0

0