100-ஐ கடந்து விற்பனையாகும் பெட்ரோல், டீசல்… தொடரும் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அப்செட்..!!
Author: Babu Lakshmanan23 October 2021, 8:20 am
சென்னை: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.92க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.92க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22க்கும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிது ரூ.100.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
0
0