மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி!!

7 March 2021, 10:33 pm
Kamal 1 - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடியது. அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்களை கடந்த மாதம் ஒரே மேடையில் அறிமுக படுத்தியது. இந்த விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா கலந்து கொண்டார்.

மேலும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் காலம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

இந்தநிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 10 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, நாளை எத்தனை தொகுதி என உறுதியான பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மற்றும் 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 4 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டே ஒரே கட்சியாகவும் திகழ்கிறது.

Views: - 72

0

0