1,000 பாதிப்புகளை தாண்டிய மேலும் ஒரு மாவட்டம் : தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா உறுதி..!!!

20 April 2021, 6:27 pm
Corona_test_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 11,000 ஐ நெருங்கியுள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 10,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 1,029 பேருக்கும், கோவையில் 686 பேருக்கும், திருவள்ளூரில் 508 பேருக்கும், மதுரையில் 366 பேருக்கும், சேலம் 383 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,205 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,250 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 79,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 80

1

0