டாஸ்மாக் விடுமுறை : பதுக்கி வைத்த மதுபாட்டில்கள் பறிமுதல்.!!

15 August 2020, 5:41 pm
Alcohol Seized - Updatenews360
Quick Share

திருப்பூர் : சுதந்திர தினம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்ககால் டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பதற்காக டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி ஆம்னி வேனில் கொண்டு வரப்பட்ட 192 மதுபாட்டில்களையும் ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை மறுதினம் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். இதை பயன்படுத்தி, டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது பாட்டல்கள் வாங்கி பதுக்கிவைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பதற்காக பலர் முயற்சி மேற்கொண்வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவிநாசி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் வடுகபாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து விசாரித்தபோது வேனில் 4 பெட்டிகளில் 192 மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் வாங்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை கொண்டுவந்த பல்லடம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை தப்பியோடியுள்ளார். மதுபாட்டில் பதுக்கலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் மற்றும் 4 பெட்டிகளில் இருந்த 192 மதுபாட்டில்களையும் அவிநாசி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 30

0

0