காற்றில் பறந்த காந்தி ஜெயந்தி விடுமுறை : தனியார் மதுபான விடுதியில் குவிந்த குடிமகன்கள்!!

2 October 2020, 6:46 pm
Illegal Liwuor Sales - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான விடுதிகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கன்னியாகுமரி அருகே தனியார் மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு மதுபான விடுதிகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பூட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியாக கருதப்படும் மலையோர பகுதியை கடக்கும் எல்லைப்பகுதியான பிரபல சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி அருகே படபச்சை பகுதியில் செயல்படும் தனியார் மதுபான விடுதியில் இன்று அரசு உத்தரவை மீறி சட்டத்துக்குப்புறம்பாக மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இங்கு மதுபானங்களை வாங்க அதிகாலை முதலே மது பிரியர்கள் குவிந்து வாங்கிச் செல்கின்றனர் இந்த செயல்களை பொதுமக்கள் சார்பாக பல முறை புகார் அளித்தும் இதுபோன்று தினந்தோறும் அதிகாலை முதல் இங்கு மதுபான விற்பனை நடைபெறுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

Views: - 59

0

0