டாஸ்மாக் நிர்வாகம் போட்ட கணக்கு : அதிர்ச்சி கொடுத்த ‘குடி’ மகன்கள்..!

5 July 2021, 1:33 pm
Cbe Tasmac- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், பல கடைகளில் மதுவாங்க ஆட்களே இல்லாமல் இருப்பது நிர்வாகத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போதிலும் கோவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது.

இந்த நிலையொல், தமிழக அரசு அறிவிற்றபடி அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

71 நாட்களுக்குப்பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கடைகளில் அதிக கூட்டம் இருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கணக்குப் போட்டது. இதனால் மரக்கட்டைகள் கொண்டு கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட கோவை வடக்கில் 158 கடைகள் தெற்கில் 135 கடைகள் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

காலை 8 மணிக்கு ஆய்வு 10 மணிக்கு கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடை திறந்தது. ஆனால், பெரும்பாலான கடைகளில் மதுபானம் வாங்க ஆட்களே வரவில்லை.

நகரின் ஒரு சில கடைகளில் மட்டும் லேசான கூட்டம் உள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் சானிடைசர் பயன்படுத்திய பின்னரே மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடை திறந்த உடன் கூட்டம் அலைமோதும் என்று கணக்குப் போட்டு பாதுகாபை பலப்படுத்திய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கோவை மதுபிரியர்கள் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

மாதத்தின் முதல் வாரம் என்பதால் ஊதியம் பெற்றிருக்க வாய்ப்பிலை அதனால் கூட்டம் இல்லை என்று கூறுகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

Views: - 159

1

0