இன்றும் நாளையும் 12 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் : தமிழக அரசு அறிவிப்பு!!

8 May 2021, 12:17 pm
Tasmac - Updatenews360
Quick Share

கோவை : டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து வரும் 10ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்த ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்காது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை வழக்கமாக அனைத்து கடைகளும் திறந்து இருக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளையும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும். 10ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்” என்றார்.

Views: - 161

0

0