தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த பலன்: ஓசூரில் வரப்போகிறது டாடா தொழிற்சாலை..பெண்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!!

29 October 2020, 4:10 pm
hosur it park - updatenews360
Quick Share

ஓசூர் தொழிற் பூங்காவில் ரூ.5,000 கோடி முதலீட்டில் டாடா நிறுவனம் தயாரிப்பு யூனிட்டை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில் டாடா நிறுவனம் தனது தயாரிப்பு அலகை தொடங்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு தொழிற்சாலை மேம்பாட்டுக் கழகம் டாடா நிறுவனத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான பூமிபூஜை முடிந்து, கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடைபெற உள்ளன. இதற்கான முதலீடு ரூ.8,000 கோடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சீனாவில் இருந்து தனது தொழில்களை வேறு நாடுகளுக்கு மாற்ற நினைக்கும் ஆப்பிள் நிறுவனம் உதிரி பாகங்களை ஓசூரில் அமையவுள்ள தொழிற்சாலை தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு பொறியியல் தொடர்பான விஷயங்களில் டைட்டன் இன்ஜினியரிங் ஆட்டோமேஷன் நிறுவனம் உதவ உள்ளதாகவும், அக்., 2021ல் செயல்பாட்டுக்கு வரும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத பணியிடங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக் சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தி அடிப்படையிலான, உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தியே டாடா நிறுவனம் புதிய உற்பத்தி அலகை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு கடும் போட்டி நிலவியதாகவும், ஃபாக்ஸ்கான், ஃபௌக்ஸ், சாம்சங், டெல், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்துள்ளதும், தமிழக அரசின் நல்ல திட்டங்களுமே டாடா நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், Electronics hardware policy 2020 என்ற திட்டத்தை வெளியிட்ட தமிழக அரசு, 2025ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு எலக்ட்ரானிக் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, அனைத்து தொழில் திட்டங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் விரைவாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 67

0

0