கொரோனா விதிமுறை மீறி குழந்தைகளுக்கு பாடம் : வைரலான புகைப்படங்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!
Author: kavin kumar12 August 2021, 8:31 pm
திண்டுக்கல்: நத்தம் அருகே அரசு விதிமுறைகளை மீறி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திய ஆசிரியர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இந்த கொரோனா காலகட்டத்தில்,அரசு உத்தரவின்றி மாணவர்களை வர சொல்லி பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவ, மாணவிகள் கொரோனா தடுக்கும் பாதுகாப்பு முறைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வகுப்பறைகள் செயல்பட்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
மேலும் அரசு அனுமதி பெறாமல் பள்ளிக்கு மாணவர்களை வரச் சொல்லி பாடம் நடத்திய தலைமையாசிரியர் ஆசிரியர்கள் குறித்து உரிய விசாரணை செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து பிள்ளையார்நத்தம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பழனிமுத்துவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது: பள்ளிக்கு மாணவ மாணவியர்கள் முட்டை,நோட் வாங்குவதற்கு வந்தபோது தங்கள் நோட்டில் எழுதியதை மாணவர்கள் ஆசிரியரிடம் காண்பித்த போது இதை யாரோ புகைப்படம் எடுத்து வெளியிட்டதாகவும் மழுப்பலான பதில்களை தெரிவித்தார்.
0
0