மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மலைவாழ் கிராமத்திற்கு நேரில் சென்ற ஆசிரியர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

14 July 2021, 4:45 pm
Students Doubts -Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே குண்டூர் மலை கிராமத்தில் மாணவர்களிடம் நேரில் சென்று சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஆசிரியரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே அமைந்து உள்ளது வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளி. இங்கு பில்லூர் அணை வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களான குண்டூர், மானார், அத்திக்கடவு, பரளிக்காடு, பில்லூர் அணை,கெத்தை காடு ஆகிய சுமார் 15-க்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளது.

மலைவாழ் கிராம பகுதிகளில் துவக்க பள்ளிகள் மட்டுமே உள்ளது. உயர்கல்விக்காக மாணவ மாணவிகள் வெள்ளியங்காடு அரசு பள்ளியில் தான் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் மலைவாழ் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கடந்த மாதம் வெள்ளியங்காடு அரசு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு நேரடியாக நேரடியாக சென்று பாடப்புத்தகங்கள் கொண்டு சென்று வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் சந்தேகங்களை தீர்த்தனர். இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி மற்றும் ஆங்கிலம் ஆசிரியை ஜோதிமணி, சமூக அறிவியல் ஆசிரியர் பரமேஸ்வரன் , அறிவியல் மதுசூதணன் மற்றும் தமிழ் ஆசரியர் அருள் சிவா ஆகியோர் மாணவர்களுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.

Views: - 83

0

0