காதலிக்க ஒருத்தி, கல்யாணம் பண்ண வேறொருத்தி : குழந்தையுடன் இளம்பெண் கண்ணீர் மனு!!

27 November 2020, 3:56 pm
Love Cheat - Updatenews360
Quick Share

கோவை : திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்னை ஏமாற்றி குழந்தையை கொடுத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி பாதிக்கபட்ட பெண் கண்னீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரிப்புத்தூர் பகுதியை சேர்ந்த பிருந்தா(வயது 21) என்ற இளம்பெண், செல்வம் என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கர்ப்பமாகி குழந்தையை கொடுத்து விட்டு தற்போது தனது உறவு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தனக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இது தொடர்பாக ஏற்கனவே பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு செல்வம் சிறையில் அடைக்கபட்டதாகவும் டி.என்.ஏ சோதனையில் பிறந்த பெண் குழந்தை செல்வத்தின் குழந்தை தான் அறிக்கை கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது உறவு பெண்ணை திருமணம் செய்து உள்ளதாகவும் பிருந்தா தெரிவித்தார்.

தன்னை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையில் கடந்த 5 வருடங்களாக காத்திருந்த நிலையில் தற்போது வேறு பெண்னை செல்வம் திருமணம் செய்து உள்ளதால் தன் மகளின் வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது எனவும் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என கண்னீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனது குடும்பத்துடன் சென்று மனு அளித்தார்.

Views: - 0

0

0