தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தாயார் மறைவு : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 11:05 am
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தயார் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார். அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயார் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!!!’ என பதிவிட்டுள்ளார்.
0
0