திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா : தீ மித்த மாணவர் தவறி விழுந்து படுகாயம் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 5:19 pm
Student Temple Fest - Updatenews360
Quick Share

புதுச்சேரி : திரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பள்ளி மாணவர் ஒருவர் தவறி விழுந்ததில் கை மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.

புதுச்சேரி, திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது.

அப்போது அதே பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் தன் தந்தையுடன் குண்டம் இறங்கினார்.

அப்போது மாணவர் தீ மித்த போது கால் தடுமாறி விழுந்தார். உடனே சுற்றி இருந்த அனைவர்களும் பதறிப்போக, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பக்தர்கள் மாணவரை தூக்கி காப்பாற்றினர்.

இதில் மாணவரின் கை மற்றும கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. கோவில் திருவிழாவில் மாணவர் தீயில் தவறி விழும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 766

1

0