சேலத்தில் தற்காலிகமாக கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி : ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் சுமூகம்!!

15 May 2021, 9:21 am
Corona Hospital Allow - Updatenews360
Quick Share

சேலம் : தனியார் மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் கொரோனா நோயாளிகள் தற்காலிகமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய ஆக்ஸிஜன், சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு இன்று முதல் கொரானா நோயாளிகளை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டோம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.

இன்று அறிவிப்பு வெளியானதை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக 8 டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

15 டன் அளவிற்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 8 டன் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளனர்.

Views: - 123

0

0