தென்காசி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு கொடுத்த விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7 வயது மகள், குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியிடம், விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும், குணராமநல்லூர் பஞ்சாயத்து 15வது வார்டு உறுப்பினருமான வீராசாமி (47) என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிச் சென்ற அந்த சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி பெற்றோரிடம் கூறினால், கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால், அச்சத்துடன் வீடு திரும்பிய சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை ஸ்கேன் எடுத்து பார்த்ததில், சிறுமி பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தள்ளது. இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சிறுமியிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அப்போது, அவரும் உண்மையை சொல்லியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதனையறிந்து விசிக கவுன்சிலர் தலைமறைவானார். பின்னர், வயலில் மறைந்திருந்த வீராசாமியை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, சிறு குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.