தாலியை கழட்டிய புதுமணப்பெண் : பாரம்பரியத்தை பறித்த பரீட்சை!!

13 September 2020, 4:36 pm
Neet Thaali - Updatenews360
Quick Share

தென்காசி : நீட் தேர்வு எழுத சென்ற பெண் தாலி மெட்டியை கழட்டி குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரது மனைவி முத்துலட்சுமி. இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார்.இன்றைய தினம் நீட் தேர்வு எழுத நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.

நீட் தேர்வு எழுத செல்லும் போது கழுத்தில் தங்க நகைகள் அணிந்து செல்ல தடை இருப்பதால் வேறு வழியின்றி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை கழட்டியதோடு காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழட்டிவிட்டு தேர்வு எழுத சென்றார். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0