தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!

18 January 2021, 11:22 am
Rubber Factory Fire - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை  வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பவர் ரப்பர் தனியார்டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

இதுகுறித்து ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் தொடர்ந்து பற்றி எரியும் தீயை அணைக்கும்  பணிகளில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தேர்வாய் கண்டிகை  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 3 தீயைணைப்பு வாகனங்ளில் 20க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0