சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!!

By: Udayachandran
18 June 2021, 9:50 am
Fire - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் பழைய டயர் உருக்கு ரப்பர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை கிராமத்தில் அமைந்த சிப்காட் தொழிற்பேட்டையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த (எஸ்தீல் ரப்பர்) பழைய டயர்களை உருக்கும் தனியார் தொழிற்சாலையில் பழைய டயர்கள் கழிவுகளில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலையில் பற்றிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு உள்ளானது.

தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வாகனம், கும்மிடிபூண்டி பஜார் தீயணைப்பு வாகனம் என ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 179

0

0