நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ; உற்பத்தி பாதிக்கும் அபாயம்… 6 மாதத்திற்காவது ஒரே விலையை நிர்ணயிக்க கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 7:57 pm
Quick Share

கரூரில் நூல் விலை ஏற்றத்தால் தவிக்கும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் விலை ஏற்றத்தால் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ஜவுளி வர்த்தகத்துக்குப் பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் பெட்ஷீட்டுகள், திரைச்சேலைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள், குஷன்கள் போன்றவை இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. இதனால் கரூர் ஜவுளி வியாபாரம், கடந்த காலத்தில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

கொரோனா பாதிப்பால் ஜவுளி ஏற்றுமதி முற்றிலும் முடங்கிய நிலையில், தற்போது மெல்ல மெல்ல உற்பத்தியை தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் சுமார் 400 ஏற்றுமதியாளர்கள் உள்ள நிலையில், தற்போது நூல் விலை ஏற்றத்தால் மிகவும் பாதிப்படைந்த உள்ளனர். இந்த நூல் விலை ஏற்றமானது கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடத்தி வரும் ஜவுளி ஏற்றுமதி தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி தொழிலானது பிரதானமாக உள்ள நிலையில், இந்த தொழிலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். வேலைவாய்ப்பு அதிகமாக வழங்கக்கூடிய தொழிலில் ஜவுளி ஏற்றுமதி தொழிலும் ஒன்றாக திகழ்கிறது.

இதில் நேரடியாக ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், இந்த ஜவுளி ஏற்றுமதி தொழிலை நம்பி உள்ள இன்றைய சூழ்நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உக்ரைன் போர் காரணமாக இறக்குமதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது நூல் விலையானது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சராசரியாக ஆயிரம் ரூபாய் இருந்த நிலையில், தற்பொழுது 2000 ஆக உயர்ந்துள்ளது.

100% நூல் விலை உயர்வு உயர்வால் தயாரிக்கும் பொருட்களை விலை உயர்த்தி இருக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், இறக்குமதி உற்பத்தியாளர்கள் பொருளாதார சீர்குலைவு காரணமாக இறக்குமதியை 50% அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இறக்குமதியை குறைத்து விட்டனர்.

கரூரை பொறுத்தவரை ஏற்றுமதி ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசு நூல் விலையை ஆறு மாதத்திற்கு முறையாக ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும். மாநில அரசு நூல் விலையை சராசரியாக ஆறு மாதத்திற்கு நிலையாக இருக்கும்படி நிர்ணயிக்க வேண்டும்.

இதற்கு கமிட்டி அமைத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்பொழுது 100% நூல் விலை ஏற்றத்தாழ் கடந்த சில ஆண்டுகளாக 10 சதவீதம் முதல் 20 சதவீதம் விலை உயர்வு இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது 100% நூல் விலை ஏற்றம், இந்த நிலை நீடித்தால் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக இழப்பு ஏற்படும். அது மட்டுமல்லாமல் பல ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், என்றார்.

Views: - 386

0

0