மதுரையில் உத்தரவை மீறிய ஜவுளிக் கடைகள் : 10 கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்!!

6 May 2021, 1:41 pm
Shop Sealed - Updatenews360
Quick Share

மதுரை : தமிழக அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட 10 ஜவுளி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விளக்குத்தூண், பத்துத்தூண், தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் 3,500 க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஜவுளி உள்ளிட்ட கடைகளை திறக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மதுரையில் 10 மேற்பட்ட ஜவுளி கடைகள் விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் செய்தனர்,

இதனையடுத்து மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அடங்கிய குழுவினர் ஜவுளி கடைகளில் இருந்த பொது மக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் பேரிடர் விதிமுறைகளை மீறிய காரணங்களுக்காக ஒவ்வொரு கடைகளுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் தமிழக அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்

Views: - 248

0

0