“தளபதி 66” First Look தேதி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
19 June 2022, 6:34 pm
Quick Share

தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தின் மூலமாக நடிகர் விஜய் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 386

0

0