தஞ்சாவூர் பெரியகோயிலில் மகர சங்கராந்தி மாட்டுப் பொங்கல் பெருவிழா : மகா நந்திகேசுவரருக்கு 500 கிலோ காய்கனி அலங்காரம்

Author: Babu Lakshmanan
15 January 2022, 2:44 pm
Quick Share

மகர சங்கராந்தி மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சுமார் 500 கிலோ எடையுடைய காய்கறி பழங்கள் இனிப்பு பூ வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மகா நந்திகேசுவரருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, முள்ளங்கி உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேசுவரர் முன் கோ பூஜை நடைபெற்றது. இதில் பசு கன்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டன. மேலும், பசுவுக்கு பொங்கல் வழங்கி வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

ஆண்டுதோறும் வெகு விமரிசையாக 108 பசு கன்றுக்கு நடைபெறும் விழா கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடத்தப்பட்டது. இதேபோல நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாக பகதர்களின்றி எளிய முறையில் இவ்விழா நடைபெற்றது.

Views: - 235

0

0