தேர்தலில் போட்டியிட இன்னும் வயசு இருக்கு… விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரிகள்…!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 3:47 pm
Quick Share

தஞ்சை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வயதை காரணம் காட்டி விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் அந்த இயக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு நேற்றுடன் நிறைவு பெற்றது. கூட்டணி, இடப்பங்கீடு உள்ளிட்டவற்றை நிறைவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில், சரியாக பூர்த்தி செய்யாத வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதில், 13வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது வேட்புமனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள், நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும், வயது பற்றாக்குறை காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிப்பதாக தெரிவித்தனர்.

Views: - 1167

0

0