ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிகரிக்கும் உணவு சீர்கேடு.. கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு..?

Author: Babu Lakshmanan
6 May 2022, 10:50 am
Quick Share

தஞ்சை – ஒரத்தநாடு அருகே உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டை சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (21).

இவர்கள் 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அப்போது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரத்தநாடு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 814

0

0