இரு குழந்தைகளுடன் தாயும் மகளும் தற்கொலை : நாய்குட்டிகளுக்கும் விஷம் வைத்து கொன்ற சோகம்!!

24 August 2020, 6:25 pm
Thanjai Suicide - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை அருகே இரண்டு குழந்தைகளுடன் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டிகளையும் கொன்று விட்டு தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள வளவன் புரத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவரது மகள் துளசி தேவி (வயது 24). துளசி தேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்த மகளுக்கு நான்கு வயது இளைய மகளுக்கு எட்டு மாதமாகிறது.

இந்நிலையில் சாந்தி தனது மகள் துளசி தேவி மற்றும் பேத்திகளுடன் வளவன்புரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் குடியிருந்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் செல்லப்பிராணிகளாக இரண்டு நாய்களும் இருந்துள்ளன.

இந்நிலையில் இவர்களது வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே பார்க்கையில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் செல்லமாக வளர்த்த இரண்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு துளசி தேவியும் அவரது தாய் சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது நடத்தை சரியில்லை எனக்கூறி உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உதவி செய்ய மறுத்து ஒதுங்கிக் கொண்டதால் மனமுடைந்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் தான் செல்லமாக வளர்த்த இரண்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவரது தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். நாய்களை அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 36

0

0