ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களுக்கு ஆழ்கடலுக்குள் நன்றி : குடும்பத்துடன் ஆழ்கடல் வீரர் செய்த சாகசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 6:10 pm
Under Sea Thanks Olympic - Updatenews360
Quick Share

புதுச்சேரி : ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கங்கள் வென்று தந்த வீரர்களுக்கு ஆழ்கடல் வீரர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஆழ்கடலில் சாகசம் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் அரவிந்த், இவர் புதுச்சேரி மற்றும் சென்னையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலுக்குள் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றும் சமூக ஈடுபாடு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிகப்படியான பதக்கங்களை இம்முறை வென்றுள்ளது, இந்தியாவிற்காக விளையாடி பதக்கங்களை வென்று தந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆழ்கடலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களின் துறையை குறிப்பிடும் வகையில் பொருட்களை கையில் ஏந்தியபடி தனது குடும்பத்தினருடன் சாகசத்தை நிகழ்த்தியுள்ளார் அரவிந்த்.

சென்னை நீலாங்கரையில் உள்ள கடல் பகுதியில் 40 அடி ஆழத்தில் தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் 7 பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை குறிக்கும் வகையில் அவர் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்ற துறைகளை குறிக்கும் வகையிலும் ஈட்டி, ஹாக்கி மட்டை, பேட்மிட்டன், குத்துச் சண்டைக்கு பயன்படுத்தப்படும் கை உரைகள் அணிந்தபடியும் இந்திய தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் சின்னத்தை கையில் பிடித்து ஆழ்கடலில் தனது குடும்பத்தினருடன் அரவிந்த் சாகசம் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 529

0

0