கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா மற்றும் நடன குழு ஒன்று நேற்று இரவு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று காலை மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி டாடா சுமோ காரில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் லாயம் விளக்கு பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து ரோஸ் மியாபுரத்திற்கு சென்ற அரசு பேருந்து மற்றும் டாட்டா சுமோ கார் நேருக்கு நேர் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காரில் இருந்தவர்கள் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்துள்ளனர்,அவர்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டாட்டா சுமோவின் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.