திருப்பூர் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற எஸ்எஸ்ஐ சண்முகவேல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்க்கட்சிகள் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை என தமிழக அரசை விமர்சித்தனர்.
இந்த சம்பவம் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் நடந்தது. தோட்டத்தில் பணியாற்றிய மூர்த்தி அவரது மகன்கள் தங்க பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசில் சரணடைந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை போலீசாரால் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்ட மணிகண்டனை கொலை நடந்த தோட்டத்துக்க அழைத்து சென்றனர்.
அப்போது அவர் அரிலாளை எடுத்து உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கியுள்ளார். இதனால் தற்காப்ஹபக்காக போலீசார் மணிகண்டனை சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.
உடனே உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்ற போது, செல்லும் வழியிலேயே உயிரிழந்து விடட்தாக மருத்துவர்கள் கூறினர். விரைவில் முழு விளக்கம் அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.