திராவிட கட்சிகளின் தலைமையில்தான் தேசிய கட்சியின் கூட்டணி அமையும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Author: Udayaraman
11 October 2020, 6:56 pm
RB Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை: தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளின் தலைமையில்தான் தேசிய கட்சியின் கூட்டணி அமையும் அதுதான் கடந்த காலங்களில் நடந்து உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதவாது:-
தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளின் தலைமையில்தான் தேசிய கட்சியின் கூட்டணி அமையும் அதுதான் கடந்த காலங்களில் நடந்து உள்ளது. அது திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் இதுதான் நடைபெற்று உள்ளது. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி.

கடந்த காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை எப்படி முன்னிறுத்தி வாக்கு சேகரித்த அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்போம். அதிமுகவில் 11 நபர்கள் அடங்கிய வழிகாட்டு குழு என்பது பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகள் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. அதன் பின்புதான் அதன் அதிகாரத்தைப் பற்றி கருத்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 36

0

0