மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…!!

20 October 2020, 9:11 am
metur dam - updatenews360
Quick Share

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,525 கனஅடியில் இருந்து 17,004 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,160 கன அடியில் இருந்து 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,525 கனஅடியில் இருந்து 17,004 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாகவும், நீர் இருப்பு 62.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Views: - 57

0

0