கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மேகலபிரியா. 26 வயதான இவர், கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கமாக பணிக்கு சென்று இரவு அறைக்கு வந்துள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டார் கதவை தட்டியபோது திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது நிர்வான கோலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கோவைக்கு வந்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சினை காரணமாக பெண் தற்கொலையில் ஈடுபட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் கொலை சம்பவங்கள் இருந்ததா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.