விடைபெற்றார் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி : தாயின் உடலுக்கு மகன் ரவீந்திரநாத் எரியூட்டினார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 6:41 pm
Ops Wife Funeral -Updatenews360
Quick Share

தேனி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நேற்று அவருடைய உடல் சென்னையில் இருந்து தேனி கொண்டு வரப்பட்டது. விஜயலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுத உற்றார், உறிவனர்கள் சடங்குகளை செய்தனர். பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனைவியின் இறுதி அஞ்சலியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதே போல அமமுக பொதுச்செயாலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், வெல்லமண்டி நடவராஜன், எம்சி சம்பத், வீரமணி, செம்மலை, ஜெயபால், ஆர்.பி உதயகுமார், பாஜக மாநில தலைவர் அணணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்று ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர்.

Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் செல்போன் மூலம் ஓபிஎஸ்ஸிடம் பேசிய பிரேமலதா ஆறுதல் கூறினார். இதே அதிமுக எம்எல்ஏக்கள், பாஜகு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டு டிராக்டரில் ஊர்வலமாக புறப்பட்டது. நகராட்சி மின் தகன மயானத்தில் கொண்டு வரப்பட்ட உடலை சந்தனக்கட்டைகள், விறகுகளின் மீது வைக்கப்ப்டடது மகன் ரவீந்திரநாத் எரியூட்டினார்.

Views: - 439

0

0