3 நாட்களாகியும் வாய்க்காலில் தவறி விழுந்த மகனின் சடலம் மீட்கப்படவில்லை : ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்!!

25 January 2021, 6:11 pm
Drowned River Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை சேர்ந்த தாஜ்தீன் அசினா தம்பதியினரின் மகன் மஹபூப் பாஷா. இவர் தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் விளையாடச் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.

3 நாட்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை . தீயணைப்புத்துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாக கூறி தேடுதலை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏ பி வாய்க்கால் தண்ணீர் செல்வதை நிறுத்தி தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மனு அளித்தனர்.

Views: - 6

0

0